100 நாள் வேலையை புறக்கணித்த கிராம மக்கள்

நிலுவை தொகை வழங்காததால் 100 நாள் வேலையை புறக்கணித்த புதுக்குப்பம் கிராம மக்கள் உள்ளனர்.
100 நாள் வேலையை திட்டத்தை   புறக்கணித்த புதுக்குப்பம் கிராம மக்களை  படத்தில் காணலாம்.
100 நாள் வேலையை திட்டத்தை புறக்கணித்த புதுக்குப்பம் கிராம மக்களை படத்தில் காணலாம்.
Published on

புதுச்சேரி:

பாகூர் தொகுதி மூர்த்திக்குப்பம் பகுதியில் 100 நாள் வேலை நடந்து வருகிறது.  

இந்நிலையில்  புதுக்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள்  தங்களுக்கு நிலுவை தொகை வழங்காததை கண்டித்து பணியை புறக்கணித்து வெளியேறினர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

 கடந்த ஆண்டு பணியில் 5 நாட்களுக்கு கூலி தரவில்லை. இந்த ஆண்டும் 5 நாட்களுக்கு கூலி தரப்படவில்லை. 

மற்ற கிராமத்தினருக்கு முழுயான கூலி கொடுத்துவிட்டு எங்களுக்கு மட்டும் தரவில்லை. பணி செய்ததற்கான 10 நாட்களுக்கான நிலுவைத் தொகையை கொடுத்தால் மட்டுமே நாங்கள் 100 நாள் வேலை வாய்ப்பில் தொடர்ந்து ஈடுபடுவோம் இவ்வாறு அவர்கள் கூறினர். 

இந்த திட்டத்தில் அளவிற்கு அதிகமான ஆட்களை நியமிப்பதாகவும், நீண்ட நாளாக கிராமசேவகராக இருந்து வருபவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என குற்றம் சாட்டினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com