பாரதியார் பல்கலைக் கூடத்துக்கு உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் நிரப்ப வேண்டும்

பாரதியார் பல்கலைக் கூடத்துக்கு உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் சமூக ஜனநாயக இயக்கங்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் சமூக ஜனநாயக இயக்கங்கள் மனு அளித்த காட்சி.
முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் சமூக ஜனநாயக இயக்கங்கள் மனு அளித்த காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுவை சமூக ஜனநாயக இயக்கங்களின் நிர்வாகிகள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஒரு மனுஅளித்தனர். 

அந்த மனுவில் புதுவை பாரதியார் பல்கலைக் கூடத்துக்கு உதவி பேராசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த சந்திப்பின் போது மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன், திராவிடர் விடுதலை கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், தமிழர் களம் செயலாளர் அழகர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை தலைவர் பாவாடைராயன்,  தன்னுரிமைக் கழக தலைவர், சடகோபன்,  மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன், செம்படுகை நன்னீரகம் தலைவர் ராமமூர்த்தி, ராவணன் பகுத்தறிவு இயக்கத் தலைவர் அபிமன்னன்,  படைப்பாளர் இயக்க பொறுப்பாளர் தமிழ்நெஞ்சன் ஆகியோர் சென்றிருந்தனர். 

இந்த நிகழ்ச்சியின் போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உடனிருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com