அணைக்கட்டில் மீன்பிடித்த தொழிலாளி தவறி விழுந்து சாவு

பாகூர் அருகே அணைக் கட்டில் மீன் பிடித்த தொழிலாளி தவறி விழுந்து இறந்து போனார்.
நீரில் மூழ்கி பலியான அய்யப்பன்
நீரில் மூழ்கி பலியான அய்யப்பன்
Published on

புதுச்சேரி: 

கடலூர் மாவட்டம் இரண்டாயிர விளாகம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது32). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஜீவா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். தமிழகத்தில் முழு ஊரடங்கால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த அய்யப்பன்  பாகூர் அருகில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் சித்தேரி அணைக் கட்டில் மீன் பிடிக்க சென்றார்.

மீன் பிடித்துக்கொண்டிருந்த போது நிலை தடுமாறி அய்யப்பன் ஆற்றில் விழுந்தார். இதனை யாரும் கவனிக்கவில்லை. இந்த நிலையில் நீரில் மூழ்கிய அய்யப்பன் பிணமாக  மிதப்பதை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் இறந்தவரின் உறவினருக்கு தெரிவித்தார்.

இதையடுத்து அவரது தாயார்   பழனியம்மாள் (48) கொடுத்த புகாரின் பேரில் பாகூர் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் விஜயகுமார், ஏட்டு அன்பழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை  கைப்பற்றி  பிரேத பரிசோ தனைக்காக கதிர்காமம் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com