படகு கவிழ்ந்து மீனவர் பலி

முத்தியால்பேட்டை சோலை நகரில் நடுக்கடலில் மீன் பிடித்த போது படகு கவிழ்ந்ததில் மீனவர் பலியானார்.
கலையரசன் உடலை பார்த்து மனைவி மற்றும் குழந்தைகள், உறவினர்கள் கதறி அழுத காட்சி.
கலையரசன் உடலை பார்த்து மனைவி மற்றும் குழந்தைகள், உறவினர்கள் கதறி அழுத காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுவை முத்தியால் பேட்டை சோலை நகர் வடக்கு பகுதி சிங்காரவேலர் தெருவை சேர்ந்தவர் கலை யரசன் (வயது41). மீனவர். இவருக்கு இலக்கியா என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

கலையரசன் தினமும் அதிகாலை தனக்கு சொந்தமான விசைபடகில் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது வழக்கம். அதுபோல்  இன்று அதிகாலை 2-.45 மணி அளவில் கலையரசன் விசைபடகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றார்.

நடுகடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக படகு திடீரென கவிழ்ந்தது. அப்போது அருகில் யாரும் இல்லாததால் அவரை காப்பாற்ற இயலவில்லை. சிறிது நேரத்தில் கலையரன் உடல் மற்றும் படகு அதே பகுதியில் கரை ஒதுங்கியது.  அவரது உடலை பார்த்து மனைவி மற்றும் உறவினர் கள் கதறி அழுதனர். இது கல்நெஞ்சை கரைய வைப்பதாக இருந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சோலைநகர் புறக்காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நடுக்கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com