வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து

அரியாங்குப்பம் அருகே வாலிபரை பீர் பாட்டிலால் குத்திய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

புதுச்சேரி:

அரியாங்குப்பத்தை அடுத்த நோணாங்குப்பம் தெற்கு வீதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 27). சம்பவத்தன்று இவர் அப்பகுதியில் பொது இடத்தில் மது குடித்துக் கொண்டிருந்த ராஜா (30), வர்மா என்ற மேகவர்மன் ஆகிய 2 பேரையும் தட்டிக் கேட்டதாக கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த ராஜா, வர்மா ஆகியோர் விஜயகுமாரை தரக்குறைவாக திட்டி பீர் பாட்டிலை உடைத்து முதுகில் குத்தினர். மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

படுகாயமடைந்த விஜயகுமார் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

பின்னர் இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜா மற்றும் வர்மாஆகிய 2  பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com