விஷ வண்டு கடித்ததில் 4 பேர் காயம்

பாகூரில் விஷ வண்டு கடித்து 4 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புளிய மரத்தில் இருந்த விஷ வண்டுகளை தீயணைப்பு வீரர்கள் தீப்பந்த ஏற்றி அப்புறப்படுத்திய காட்சி.
புளிய மரத்தில் இருந்த விஷ வண்டுகளை தீயணைப்பு வீரர்கள் தீப்பந்த ஏற்றி அப்புறப்படுத்திய காட்சி.
Published on

புதுச்சேரி:

பாகூர்  வில்லியனூர் செல்லும் சாலையில் ஏராளமான புளிய மரங்கள் வழி நெடுகிலும் இருந்து வருகிறது. இதில் ஒரு புளிய மரத்தில் விஷ வண்டு கூடுகட்டி உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை அவ்வழியாக சென்ற அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் (72), திலகம் (65), கங்கா (80), தண்டபாணி (62) ஆகிய 4 பேரை அடுத்தடுத்து விஷ வண்டு கடித்தது.

இதில் காயமடைந்த 4 பேரும் அருகில் உள்ள பாகூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

தகவலறிந்த பாகூர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அதிகாரி பக்கிரி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் நேற்று இரவு 10 மணி அளவில் புளிய மரத்தில் கூடு கட்டி இருந்த விஷ வண்டை தீவைத்து அகற்றினர்.

அதே பகுதியில் மேலும் 2 விஷ வண்டு கூடுகள் உயரமான மரத்தில் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். 

அதையும் வனத்துறை உதவியுடன் தீயணைப்பு படை வீரர்கள் தீ வைத்து அகற்ற நடவடிக்கை எடுப்பதாக தீயணைப் புத்துறை நிலைய அதிகாரி தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் 100 நாள் வேலையில் வேலை செய்து கொண்டிருந்த பெண் ஒருவரை விஷ வண்டு கடித்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com