கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது

தவளக்குப்பம் அருகே கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

புதுச்சேரி:

தவளக்குப்பம் அருகே  நல்லவாடு சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பதாக தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமாருக்கு தகவல் கிடைத்தது. 

அதன் பேரில் தவளக்குப்பம் போலீசாருக்கு 

கஞ்சா விற்கும் கும்பலை பிடிக்க உத்தரவிட்டார். தவளக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு   சந்தேகப் படும்படியாக 4 பேர் நின்று கொண்டிருப்பதை போலீசார் கண்டனர். அதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்ற 3 பேரையும் பிடித்து சோதனை செய்த போது அவர்கள் ஏராளமான கஞ்சா   பொட்டலங்கள் வைத்திருந்தனர்.

இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.   விசாரணையில் அவர்கள் அபிஷேகப்பாக்கம் புது நகர் கெங்கையம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த ரோகித் என்ற லட்சுமி நாராயணன் (வயது 20), நல்லவாடு பகுதியை சேர்ந்த ரஜினி என்கிற ரஜினி ஸ்ரீதர் (29 மற்றும் அதே பகுதியை சேர்ந்த சீமன் என்ற (18) என்பது தெரிய வந்தது.

அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து  252 கிராம் கஞ்சா  பொட்டலங்கள் பறி முதல்  செய்தனர். மேலும் தப்பி ஓடிய மற்றொருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com