இன்று நினைவு தினத்தையொட்டி இம்மானுவேல் சேகரன் உருவப்படத்துக்கு அரசியல் கட்சியினர் மரியாதை

இம்மானுவேல் சேகரன் உருவப்படத்திற்கு அ.தி.மு.க மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இம்மானுவேல் சேகரன் உருவப்படத்திற்கு முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் மரியாதை செலுத்தினார் .
இம்மானுவேல் சேகரன் உருவப்படத்திற்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் மரியாதை செலுத்தப்பட்ட காட்சி.
இம்மானுவேல் சேகரன் உருவப்படத்திற்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் மரியாதை செலுத்தப்பட்ட காட்சி.
Published on

நெல்லை:

தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி நெல்லை மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் டவுன் கூட்டுறவு வங்கி தலைவர் பால் கண்ணன், பாளை தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், பகுதி செயலாளர் சிந்து முருகன், சண்முக குமார், திருத்துச் சின்னத்துரை, முன்னாள் அரசு வழக்கறிஞர் அன்பு அங்கப்பன், சீனி முகமது சேட், பாறையடி மணி, பொதுக்குழு உறுப்பினர் கங்கை வசந்தி, தருவை காமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ்

நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் அலங் கரித்து வைக்கப் பட்டிருந்த இமானுவேல் சேகரன் உருவப்படத்திற்கு முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் மரியாதை செலுத்தினார் .

இதில் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன், பொதுச் செயலாளர் சொக்கலிங்க குமார், பொருளாளர் ராஜேஷ் முருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

த.ம.மு.க.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பாளை மகாராஜா நகரில் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் இம்மானுவேல் சேகரன் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் நாகரா ஜசோழன், முத்துப்பாண்டி, மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com