போலீஸ்- பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்

மேலச்செவலில் போலீசார்- பொதுமக்கள் நல்லுறவு மற்றும் சமாதான கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் மேலச்செவல் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ்- பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்
Published on

நெல்லை:

நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட மேலச்செவல் மற்றும் கோபாலசமுத்திரம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலைகளை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக இன்று மேலச்செவலில் போலீசார்- பொதுமக்கள் நல்லுறவு மற்றும் சமாதான கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சுபக்குமார், ராஜா ஆகியோர் தலைமை தாங்கினார். முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் முன்னிலை வகித்தார். பேரூராட்சி தலைவர் அன்னபூரணி கலந்து கொண்டு பேசினார். இதில் சேரன்மகாதேவி தாசில்தார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலச்செவல் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் சாதி வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என போலீஸ் அதிகாரிகள் வலியுறுத்தி பேசினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com