கோவில் குளத்தில் மனித மண்டை ஓடு-எலும்பு துண்டுகள்: போலீசார் விசாரணை

கோவில் குளத்தில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்பு துண்டுகளும் கிடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில் குளத்தில் மனித மண்டை ஓடு-எலும்பு துண்டுகள்: போலீசார் விசாரணை
Published on

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் வைப்பூர் அருகே பழையவலம் கிராமத்தில் சிவன்கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலுக்கு சொந்தமாக பெரியகுளம் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அந்தக்குளத்திற்கு பொதுமக்கள் சென்றனர்.

அப்போது அங்கு மனித மண்டை ஓடு மற்றும் எலும்பு துண்டுகள் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக இது குறித்து அவர்கள் கிராம நிர்வாக அலுவலர் கண்ணனுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அவர் இது குறித்து வைப்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் கலைவாணி தலைமையில் போலீசார் சிவன் கோவில் பெரிய குளத்திற்கு வந்து பார்வையிட்டனர். அங்கு கிடந்த அடையாளம் தெரியாத மனித மண்டை ஓடு மட்டும் எலும்பு துண்டுகளை சேகரித்து பரிசோதனைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக பழையவலம் கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் குளத்தில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்பு துண்டுகளும் கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com