பாவூர்சத்திரம் கொள்ளை வழக்கில் சிக்கிய கும்பலிடம் துருவி துருவி விசாரணை

இவர்கள் சம்பவத்தன்று இரவு தங்களது வீட்டில் இருந்தபோது 3 மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர்.இன்றும் 2-வது நாளாக அவர்களிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாவூர்சத்திரம் கொள்ளை வழக்கில் சிக்கிய கும்பலிடம்  துருவி துருவி விசாரணை
Published on

பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் சிதம்பர நாடார் தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 88). இவருடைய மனைவி ஜாய் சொர்ணதேவி (83). இவர்கள் 2 பேரும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆவார்கள்.

இவர்கள் சம்பவத்தன்று இரவு தங்களது வீட்டில் இருந்தபோது 3 மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். அங்கு இருந்த அருணாச்சலம், ஜாய் சொர்ணதேவி ஆகியோரை கட்டிப்போட்டு 140 பவுன் தங்க நகைகள், ரூ.10 லட்சம் ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில், ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு, பாவூர்சததிரம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதற்கிடையே சந்தேகத்தின் பேரில் தூத்துக்குடியை சேர்ந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்றும் 2-வது நாளாக அவர்களிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com