கிராம உதவியாளரை தேடும் போலீசார்

உருட்டு கட்டையால் தாக்கியதில் வாலிபர் படுகாயமடைந்தார்.புகாரின்பேரில் தாக்கிய கிராம உதவியாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

பெரும்பாறை:

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் தண்டபாணி என்ற பாலசுப்பிரமணியம் (வயது 60). இவர், மணலூர் ஊராட்சியில் கிராம உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று இவர் பெரும் பாறை அருகே உள்ள மஞ்சள்பரப்பு கிராமத்திற்கு சென்றார். அப்போது பாலசுப்பிரமணியத்துக்கும், அதே ஊரை சேர்ந்த முத்து வேலுக்கும் (45) இடையே தகராறு ஏற்பட்டது. இதனை பார்த்த மஞ்சள்பரப்புவை சேர்ந்த கூலித் தொழிலாளியான சோனைமுத்து (54) தகராறை விலக்கிவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியம், சோனைமுத்துவை உருட்டு கட்டையால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவரை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து பாலசுப்பிரமணியம் மீது தாண்டிக்குடி போலீசார் வழக்கு செய்து தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com