கட்டிட தொழிலாளியை அரிவாளால் வெட்டிய 2 பேரிடம் விசாரணை

திண்டுக்கல்லில் முன்விரோதம் காரணமாக வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.இச்சம்பவம் தொடர்பாக போலீசார் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

குள்ளனம்பட்டி :

திண்டுக்கல் சவேரியார்பாளையம் நேருஜிநகரை சேர்ந்த சகாயராஜ் மகன் அருண்குமார்(25). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று மாலையில் வேலை முடிந்து அதேபகுதியில் உள்ள ஒரு சலூன் கடையில் முடிவெட்டுவதற்காக சென்றார். அப்போது அந்த கடைக்குள் புகுந்த ஒரு கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை கொண்டு அருண்குமாரை சரமாரியாக தாக்கினர்.

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைபார்த்தும் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். காயமடைந்த அருண்குமாரை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதுகுறித்து நகர் தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் அசனாத்புரத்ைத சேர்ந்த சிராஜ்தீன்(25), திருப்பூரை சேர்ந்த ஜெயராஜ்(27) ஆகிய 2 பேரை பிடித்து விசாரித்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்விரோதத்தில் அருண்குமார் சிராஜூதீனை வெட்டியுள்ளார்.

அதற்கு பழிக்குபழி வாங்கும் நோக்கில் சிராஜூதீன் தனது நண்பர்களுடன் சென்று தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இச்சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் ஒரு சிலரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com