பூட்டி கிடந்த மளிகை கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு

கடையின் வெளியே வைக்கப்பட்டிருந்த உப்பு மூட்டைகள் எரிந்து சேதமானது.சந்தேகத்தின் பேரில் 3 பேரை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.
பூட்டி கிடந்த மளிகை கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு
Published on

தொட்டியம்:

திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்த தோளூர்பட்டியை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 60). இவருக்கு சொந்தமான கடையை தொட்டியம் பாலசமுத்திரத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கு மளிகை கடை வைப்பதற்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் இங்கு வந்தனர். திடீரென்று அவர்கள் முருகானந்தம் நடத்திவரும் மளிகை கடை முன்பாக பெட்ரோல் குண்டினை வீசியதாக கூறப்படுகிறது. இதில் கடையின் வெளியே வைக்கப்பட்டிருந்த உப்பு மூட்டைகள் எரிந்து சேதமானது.

கடையின் சுவரில் சிறு பகுதி பெயர்ந்து விழுந்தது. சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்த ஞானசேகரன் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தா ர். பின்னர் இதுபற்றி உடனடியாக தொட்டியம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பெயரில் போலீஸ் திருச்சி மாவட்ட ஏ.டி.எஸ்.பி. கோடிலிங்கம், தொட்டியம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கதிரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சம்பவ இடத்தை போலீசார் நேரில் பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் பெண்ணுடன் பேசுவது தொடர்பாக ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த சம்பவம் நடந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் 3 பேரை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com