திருவெண்ணைநல்லூர் அருகே இருசக்கர வாகனம் மோதி பிளம்பர் பலி

விவசாய வேலைக்கு சென்று விட்டு திரும்ப தன் வீட்டிற்கு திரும்பினார். எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பாபு தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்தார்.
திருவெண்ணைநல்லூர் அருகே  இருசக்கர வாகனம்  மோதி பிளம்பர் பலி
Published on

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பஸ் ஸ்டாண்ட் தெருவைச் சேர்ந்தவர் பாபு (வயது45). இவர் பிளம்பர் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று பரிக்கல் அருகே உள்ள பெரும்பாக்கம் கிராமத்திற்கு விவசாய வேலைக்கு சென்று விட்டு திரும்ப தன் வீட்டிற்கு வரும் பொழுது பெரியசெவலை செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பாபு தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த பாபு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பாபு உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப் பதிந்து விசார ணை செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com