குனியமுத்தூர் அருகே மனைவி-மாமியாரை அரிவாளால் வெட்டிய பிளம்பர்

விசாலாட்சி, உமாராணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். குனியமுத்தூர் போலீசார் ஆனந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குனியமுத்தூர் அருகே மனைவி-மாமியாரை அரிவாளால் வெட்டிய பிளம்பர்
Published on

குனியமுத்தூர்,

கோவைப்புதூர் அருகே உள்ள குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் ஆனந்தன்(வயது 43). பிளம்பர்.

இவரது மனைவி விசாலாட்சி (34). இவர்களுக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து விசாலட்சி சரவணம்பட்டியில் வசிக்கும் அவரது தாய் உமாராணி (55) என்பவரிடம் கூறினார். அவர் நான் நேரில் வந்து பேசுகிறேன். எல்லாம் சரியாகி விடும் என்றார்.

அதன்படி சம்பவத்தன்று இவர் தனது மருமகனிடம் கணவன்-மனைவிக்கு இடையே உள்ள கருத்துவேறுபாட்டை பேசி சரி செய்வதற்காக சென்றார். பேசிக் கொண்டு இருந்த போது உமாராணிக்கும், ஆனந்தனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்தன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தனது மாமியாரை வெட்டினார்.

இதனை பார்த்த விசாலாட்சி தடுக்க சென்றார். அவரையும் ஆனந்தன் அரிவாளால் வெட்டினர். இதில் அவர்களுக்கு தலை மற்றும் உடலில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. 2 பேரும் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டனர். பின்னர் ஆனந்தன் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய விசாலாட்சி மற்றும் உமாராணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவி மற்றும் மாமியாரை அரிவாளால் வெட்டி விட்டு தலைமறைவாக இருந்த ஆனந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com