கோட்டைப்பட்டி ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

கோட்டைப்பட்டி ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றதுஇதில் பலர் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர்
கோட்டைப்பட்டியில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
கோட்டைப்பட்டியில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
Published on

வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு அருகே உள்ள கோட்டைப்பட்டியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் கூட்டம் நடந்தது. ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் வனிதா மாணிக்கம் தலைமை வகித்தார்.

துணைத் தலைவர் நாகஜோதி கண்ணன், ஊராட்சி செயலாளர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகாலட்சுமி, தூய்மை பாரதத்திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் சின்னன் ஆகியோர்பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றி பேசினர். கூட்டத்தில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாணவர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷமிட்டவாறு விழிப்புணர்வு பேரணி சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com