காயல்பட்டினம் கடற்கரையில் பனை விதைகள் நடவு

காயல்பட்டினம் கடற்கரையில் எல்.கே. மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் பனை விதைகள் நடப்பட்டன.தேசிய மாணவர் படையினர் 100 பேர் உள்ளிட்ட மாணவர்கள் ஆயிரம் பனை விதைகளை சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடவு செய்தனர்.
காயல்பட்டினம் கடற்கரையில் பனை விதைகள் நடவு
Published on

ஆறுமுகநேரி:

தூத்துக்குடி தேசிய மாணவர் படை தரை பிரிவு அதிகாரி லெப்டினன் கர்னல் பிரதோஷ் உத்தரவின்படி காயல்பட்டினம் கடற்கரையில் எல்.கே. மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் பனை விதைகள் நடப்பட்டன.

இதன் தொடக்க நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் செய்யது மைதீன் பனை மரத்தின் அவசியம் மற்றும் பயன்களை பற்றி பேசினார். தேசிய மாணவர் படையினர் 100 பேர் உள்ளிட்ட மாணவர்கள் ஆயிரம் பனை விதைகளை சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடவு செய்தனர். ஏற்பாடுகளை பள்ளியின் உதவி தலைமை ஆசிரியரும், தேசிய மாணவர் படை அலுவலருமான ஷேக் பீர் முகம்மது காமில் செய்திருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com