கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கார் கண்ணாடியை உடைத்து திருடியவர் கைது

சுற்றுலா பயணிகள் கார் கண்ணாடியை உைடத்து திருடியவர் கைது செய்யப்பட்டார்.லேப்டாப், பாஸ்போர்ட், ஏ.டி.எம்.கார்டுகள் பறி முதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட அப்துல்ரசீத்.
கைது செய்யப்பட்ட அப்துல்ரசீத்.
Published on

கொடைக்கானல்:

லக்னோ இந்திராநகரை சேர்ந்தவர் சுபானா க்ஸ்ரீவத்சவா(31). தற்போது இவர் பெங்களூர் பொம்மனஹள்ளி பகுதியில் வசித்து வருகிறார். தனது குடும்பத்துடன் கொடை க்கானலுக்கு சுற்றுலா வந்தார். பிரையண்ட் பூங்கா பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு சுற்றுலா இடங்களுக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு லேப்டாப் திருடப்பட்டது கண்டு அதிர்ச்சிஅடைந்தார்.

இதுகுறித்து கொடை க்கானல் போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த நிலையில் பைன்பாரஸ்ட் பகுதியில் உள்ள காரின் கண்ணாடிகள் உடைக்க ப்பட்டு திருடப்பட்டது குறித்து வனக்காவலர்கள் விசாரித்தனர். அப்போது தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த அப்துல்ரசீத்(42) என்பவர் நூதனதிருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவரிடமிருந்து லேப்டாப், பாஸ்போர்ட், ஏ.டி.எம்.கார்டுகள் பறி முதல் செய்யப்பட்டது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com