மாநில அளவிலான கையுந்து பந்து போட்டிக்கு பேராவூரணி அரசு பள்ளி மாணவிகள் தேர்வு

சத்யா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனர்.வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
மாநில அளவிலான போட்டிக்கு விளையாட தேர்வான மாணவர்களை ஆசிரியர்கள் பாராட்டினர்.
மாநில அளவிலான போட்டிக்கு விளையாட தேர்வான மாணவர்களை ஆசிரியர்கள் பாராட்டினர்.
Published on

பேராவூரணி:

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அணி, தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கையுந்து பந்து போட்டியில் மேலோர் பிரிவில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனர்.

இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகளை, பள்ளி தலைமை ஆசிரியை வீ.சாந்தி, உதவி தலைமை ஆசிரியர் சுப.கார்த்திகேயன், உடற்கல்வி ஆசிரியர்கள் அ.ரெங்கேஸ்வரி, ம.அன்னமேரி, எஸ்.நீலகண்டன், பயிற்சியாளர் மற்றும் மாநில நடுவர் பாரதிதாசன், ஆசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் பாராட்டினர்.

அதேபோல், அசோக்குமார் எம்.எல்.ஏ, பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர் ஆகியோரும் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com