பள்ளிக்கு ரூ.2 லட்ச மதிப்பில் தளவாடப் பொருள்கள் வழங்கும் விழா

பள்ளிக்கு ரூ.2 லட்ச மதிப்பில் தளவாடப் பொருள்கள் வழங்கும் விழா நடைபெற்றது திம்மூர் ஊராட்சி ஒன்றியத்தில்
பள்ளிக்கு ரூ.2 லட்ச மதிப்பில் தளவாடப் பொருள்கள் வழங்கும் விழா
Published on

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம் திம்மூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் தளவாடப் பொருள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ரவி தலைமை தாங்கினார். திம்மூர் ஊராட்சி மன்ற தலைவர் அழகேசன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வேம்பு, ஊராட்சி மன்ற துணை தலைவர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரூ.2 லட்சம் மதிப்பில் திம்மூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரும் ஒன்றிய கவுன்சிலருமான என்.கே கர்ணன் தளவாடப் பொருள்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வராஜ், பெரியசாமி, முன்னாள் தலைவர்கள் பச்சமுத்து, செல்வராஜ், மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், திம்மூர் கிராம முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அனைவரையும் உதவி தலைமை ஆசிரியர் ஆனந்த் வரவேற்றார். முடிவில் பிரபாகரன் நன்றி கூறினார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com