முதியவர் விஷம் குடித்து தற்கொலை

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கண் வலியால் அவதிப்பட்டு வந்தார்
முதியவர் விஷம் குடித்து தற்கொலை
Published on

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, ஒகளூர் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் ராசு (வயது 73). தனது மனைவியுடன் வசித்து வந்த இவர் கடந்த சில நாட்களாகவே கண் வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்த ராசு களைக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்ததில் வாந்தி எடுத்தார். இதனை கண்ட அவரது குடும்பத்தினர், உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் மாவட்டம், திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராசு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்."

X

Maalai Malar
www.maalaimalar.com