முன்விரோதம் காரணமாக வீடு சூறையாடல்

வயலூர் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக வீடு சூறையாடப்பட்டதுதாக்கப்பட்ட பெண் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்
முன்விரோதம் காரணமாக வீடு சூறையாடல்
Published on

அகரம்சீகூர், 

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள வயலூர் கிராமத்தில் வசிக்கும் தங்கவேல் பூசாரியின் மகன்கள் முருகேசன், மாணிக்கம். இருவரிடையே சொத்து பிரிப்பதில் தகராறு காரணமாக முன் விரோதம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முருகேசன் மருமகன் மோகன் தனது நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து, மாணிக்கம் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.அப்போது மாணிக்கம் மனைவி பூங்காவனம் (வயது 60) என்பவரையும் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த பூங்காவனம் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்த வந்த அகரம்சீகூர் காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com