பெரம்பலூரில் வீடு தீப்பற்றி எரிந்து நாசம்

குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் நடுத்தெருவை சேர்ந்தவர் சண்முகம்(வயது 63). இவர் ஓட்டு வீட்டில் தனது மகளுடன் வசித்து வருகிறார். காலை 11 மணியளவில் சண்முகத்தின் வீடு திடீரென்று தீப்பற்றி எரிய தொடங்கியது.
பெரம்பலூரில் வீடு தீப்பற்றி எரிந்து நாசம்
Published on

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் நடுத்தெருவை சேர்ந்தவர் சண்முகம்(வயது 63). இவர் ஓட்டு வீட்டில் தனது மகளுடன் வசித்து வருகிறார்.

நேற்று காலை இவர்கள் 2 பேரும் வீட்டை பூட்டிவிட்டு அருகே உள்ள குரும்பலூர் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு சென்று விட்டனர். காலை 11 மணியளவில் சண்முகத்தின் வீடு திடீரென்று தீப்பற்றி எரிய தொடங்கியது.

இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் உடனடியாக பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

இருப்பினும் வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டி, 2 கதவுகள், ஒரு மேஜை, மின் விசிறி, கட்டில் ஆகியவை தீக்கு இரையாயின. குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பற்றி இருக்கலாம் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com