போட்டித்தேர்வுகள் எழுதுவோருக்கு இலவச பயிற்சி வகுப்பு நாளை தொடக்கம்

போட்டித்தேர்வுகள் எழுதுவோருக்கு இலவச பயிற்சி வகுப்பு நாளை முதல் தொடங்குகிறதுவேலைவாய்ப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
போட்டித்தேர்வுகள் எழுதுவோருக்கு இலவச பயிற்சி வகுப்பு நாளை தொடக்கம்
Published on

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை) இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 போட்டித் தேர்வு ஆகியவற்றில் கலந்து கொள்ள இருப்பவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (3-ந்தேதி) தொடங்க உள்ளது.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் நடத்தப்படும் இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய விவரங்களை இன்று மாலைக்குள் இணையதளத்தில் உள்ளீடு செய்து பதிவு செய்ய வேண்டும். மேலும் போட்டித்தேர்வு விண்ணப்பித்தற்கான நகல், ஆதார் கார்டு, புகைப்படங்கள் ஆகியவற்றை பயிற்சி வகுப்புக்கு வரும் போது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்க வேண்டும் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  

X

Maalai Malar
www.maalaimalar.com