மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி

மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி பெரம்பலூரில் நடைபெற்றது. அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி
Published on

பெரம்பலூர்:

பெரம்பலூரில், மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி இன்று நடந்தது. 11, 14, 17, 19 ஆகிய வயதிற்குட்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், 19 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. ஒற்றையர் பிரிவில் நடத்தப்பட்ட டேபிள் டென்னிஸ் போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பெரம்பலூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு வளவன் கலந்து கொண்டு போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடித்த வீரர்-வீராங்கனைகளுக்கு பதக்கம், கேடயம், சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன. முதலிடம் பிடித்தவர்கள் சென்னையில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 2, 3, 4-ந்தேதிகளில் மாநில அளவில் நடைபெறவுள்ள டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

X

Maalai Malar
www.maalaimalar.com