பெரம்பலூரில் நடன செவ்வியல் போட்டி

பெரம்பலூரில் நடன செவ்வியல் போட்டி நடைபெற்றதுதனலட்சுமி சீனிவாசன் பள்ளி மாணவி சாதனை
பெரம்பலூரில் நடன செவ்வியல் போட்டி
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கலா உற்சவப் போட்டிகளான வாய்ப்பாட்டு இசைசெவ்வியல், நடனம் செவ்வியல், நாடகம், இசைக்கருவி தாளவாத்தியம், காண்கலை, இருபரிமாணம் காண்கலை, முப்பரிமாணம் நடனம், பாரம்பரிய நாட்டுப்புறவகை, உள்ளூர் தொன்மை பொம்மை விளையாட்டுகள் போன்ற பல்வேறு வகையான போட்டிகள் பெரம்பலூர் மாவட்ட சாரணர் கூட்ட அரங்கில் நடைபெற்றன.

இதில் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

போட்டியில் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி வே.ஹாசினி நடன செவ்வியல் போட்டியில் பங்கேற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

மேலும் வருகின்ற 17-ந் தேதி சேலத்தில் வைஷ்யா கல்லூரியில் நடைபெறும் மாநில அளவிலான கலை பண்பாட்டு போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்.

நடன செவ்வியல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

பள்ளியின் முதன்மை முதல்வர், துணை முதல்வர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

.

X

Maalai Malar
www.maalaimalar.com