ஓடும் பஸ்சில் பயணியிடம் சங்கிலியை பறித்த 2 பெண்கள்

ஓடும் பஸ்சில் பயணியிடம் 2 பெண்கள் சங்கிலியை பறித்தனர் போலீசில் ஒப்படைத்தனர்
ஓடும் பஸ்சில் பயணியிடம் சங்கிலியை பறித்த 2 பெண்கள்
Published on

பெரம்பலூர்

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூருக்கு நேற்று மாலை ஒரு அரசு டவுன் பஸ் பயணிகளுடன் புறப்பட்டது. அப்போது எசனை பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது ஒரு பெண் பயணியின் அருகே இருந்த 2 பெண்கள் சேர்ந்து தங்க சங்கிலியை பறித்துள்ளனர். இதனை கண்ட அந்த பெண், சக பயணிகள் உதவியுடன் அந்த 2 பெண்களையும் கையும், களவுமாக பிடித்து, அவர்களிடம் இருந்து சங்கிலியை கைப்பற்றி பெரம்பலூர் போலீசாரை வரவழைத்து ஒப்படைத்தார். பின்னர் அவர்களை போலீசார் அழைத்து சென்றனர். அந்த பெண் பயணி புகார் தராததால், அந்த 2 பெண்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com