மக்கள் குறை தீர்க்கும் முகாமில் 293 மனுக்கள் பெறப்பட்டன

மக்கள் குறைதீர்க்கும் முகாம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடைபெற்றது. இதில் முதியோர் உதவி தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் கேட்டு மொத்தம் 293 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ள.
மக்கள் குறை தீர்க்கும் முகாமில் 293 மனுக்கள் பெறப்பட்டன
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடைபெற்றது.

இதில் முதியோர் உதவி தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் கேட்டு மொத்தம் 293 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ள.

மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர், அவற்றை பரிசீலனை செய்து அதிகாரிகளிடம் வழங்கி அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதன்பிறகு மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி மணிமேகலை, அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com