மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்- மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டி-கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 306 மனுக்கள் பெறப்பட்டது. மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டியை தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.
மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் நகரும் வண்டியை வழங்கிய காட்சி.
மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் நகரும் வண்டியை வழங்கிய காட்சி.
Published on

தென்காசி:

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.இதில் பொதுமக்களிடம் இருந்து இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர கோருதல், பட்டாமாறுதல்,மாற்றுத் திறனாளிகள் உதவி தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 306 மனுக்கள் பெறப்பட்டது.

இந்த கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்கள் ஆக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் மாற்றுத்தி றனாளிகள் நலத்துறையின் மூலம் ரூ.1 லட்சம் மதிப்பிலான மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டியை முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (பொறுப்பு) முத்து மாத வன் மற்றும் சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் (பொறுப்பு) ராஜ மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com