மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்படுகிறது.இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 109 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10.15 லட்சம் மதிப்பிலான தையல் இயந்திரங்களை மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா வழங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் எந்திரங்களை வழங்கிய காட்சி.
மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் எந்திரங்களை வழங்கிய காட்சி.
Published on

சேலம்:

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவை அனைத்தும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய தீர்வு காணப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், இன்று மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா அவர்கள் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக் கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளி களுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து 295 மனுக்கள் வரப்பெற்றன. மேலும், மாற்றுத்திறனாளி களிடமிருந்து 16 மனுக்கள் வரப்பெற்றன.

முன்னதாக, இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 109 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10.15 லட்சம் மதிப்பிலான தையல் இயந்திரங்களை மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா வழங்கினார்.

இக்கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மயில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com