படப்பிடிப்பிற்காக வந்த நடிகர் வடிவேலுவை காண குவிந்த மக்கள்

வடிவேலு நடிக்கும் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு சில வாரங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.பொது மக்கள் போட்டா போட்டி போட்டு அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
படப்பிடிப்பிற்காக வந்த நடிகர் வடிவேலுவை காண குவிந்த மக்கள்
Published on

கல்லிடைக்குறிச்சி:

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, முக்கூடல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இயக்குனரும், நடிகருமான சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு சில வாரங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த படத்திற்காக அம்பாசமுத்திரம் மற்றும் கல்லிடைக்குறிச்சி ரெயில்வே நிலையங்களின் எதிரே கடந்த 2 நாட்களாக படப்பிடிப்பு பணி முழு வீச்சில் நடை பெற்று வருகிறது. இந்த காட்சிகளில் நடிப்பதற்காக நகைச்சுவை நடிகர் வடிவேலு அங்கு முகாமிட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று அந்த இடத்தில் ஒரு கேரவனில் வடிவேலு தங்கியிருப்பதை கேள்விப்பட்டு அவரை பார்ப்பதற்காக அப்பகுதி மக்கள் திரண்டனர். அவர்கள் கேரவினை முற்றுகையிட்டு நின்று கொண்டிருந்தனர்.

இதனை அறிந்த வடிவேலு, வேனில் இருந்து இறங்கி வெளியே வந்து முகம் கோணாமல் அனைவருடனும் தனித்தனியாக நின்று கொண்டு செல்பி எடுக்க போஸ் கொடுத்தார். பொது மக்கள் போட்டா போட்டி போட்டு அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com