குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

பொதுமக்களுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
Published on

நாகப்பட்டினம்:

திருக்குவளை ஊராட்சி கீழ்குடி கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இப்பகுதியில் ஊராட்சி சார்பில் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் முறையாக வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை தெரிவித்தும் எந்த வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள் திருக்குவளையில் இருந்து மேலப்பிடாகை செல்லும் பிரதான சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றி செல்வம் , திருக்குவளை போலீசார் அவர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தையில் பொது மக்களுக்கு டேங்கர் லாரியின் மூலம் தண்ணீர் விநியோகம் செய்வது என்றும் முடிவானது.

இதில் உடன்பாடு எட்டியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதி யில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com