சாயர்புரம் அருகே ரேஷன் பொருட்கள் கிடைக்காததால் பொதுமக்கள் ஏமாற்றம்

சாயர்புரம் அருகே உள்ள நட்டாத்தி ஊராட்சிக்குட்பட்ட பட்டாண்டி விளை கிராமத்தில் பகுதி நேர நியாய விலை கடை உள்ளது.நியாய விலைக்கடையில் வாரம் 2 நாட்கள் ரேசன் பொருட்கள் வழங்க கோரி அப்பகுதியினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல முறை மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது
ரேஷன் கடை முன்பு அமர்ந்திருந்த பொதுமக்கள் 
ரேஷன் கடை முன்பு அமர்ந்திருந்த பொதுமக்கள் 
Published on

சாயர்புரம்:

சாயர்புரம் அருகே உள்ள நட்டாத்தி ஊராட்சிக்குட்பட்ட பட்டாண்டி விளை கிராமத்தில் பகுதி நேர நியாய விலை கடை உள்ளது. இங்கு வாரம் ஒரு நாள் ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்த நியாய விலைக்கடையில் வாரம் 2 நாட்கள் ரேசன் பொருட்கள் வழங்க கோரி அப்பகுதியினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல முறை மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாதம் ஒரு நாள் மட்டுமே பட்டாண்டி விளை கடையில் பொருட்கள் வழங்கப்படும் என்று சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி பொது மக்கள் காலை முதல் மாலை வரை ரேஷன் பொருட்கள் வாங்க காத்திருந்து ஏமாற்றமடைந்தனர்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com