சேலம் மேற்கு தபால் கோட்டத்தில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம்

சேலம் மேற்கு தபால் கோட்டத்தில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.
சேலம் மேற்கு தபால் கோட்டத்தில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம்
Published on

சேலம்:

சேலம் மேற்கு தபால் கோட்டத்தின் சார்பாக ஓய்வூதியம் பெறுவோர்க்கான குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 29-ந்தேதி மாலை 3 மணிக்கு சூரமங்கலம் தலைமை அஞ்சலக வளாகத்தில் உள்ள சேலம் மேற்கு தபால் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

அது சமயம் ஓய்வூதியம் சம்பந்தமான பிரச்சினைகள் மற்றும் குறைகள் பற்றிய கலந்தாய்வு கோட்ட கண்காணிப்பாளர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே சேலம் மேற்கு தபால் கோட்டத்தில் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியர்கள் இந்த சந்தர்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்குமாறு சேலம் மேற்கு தபால் கோட்ட கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com