சீர்காழியில் பொது இடத்தில் குப்பை கொட்டினால் அபராதம்

வீடு, வீடாக தூய்மை பணியாளர்கள் குப்பைகளை தரம் பிரித்து வாங்கி நாள்தோறும் வரும் வாங்கி வாகனங்கள் மூலம் நகராட்சி குப்பை கிடங்கில் கொண்டு கொட்டுகின்றர்.நாள்தோறும் இந்த குப்பைகளை அகற்றினாலும் குப்பைகள் அகற்றிய உடனே பொதுமக்கள் சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர்.
பொது இடத்தில் குப்பை கொட்ட தடைவிதித்து எச்சரிக்கை பேனர் வைக்கப்பட்டுள்ளதை பார்வையிடும் நகர்மன்ற உறுப்பினர் ஜெயந்தி பாபு.
பொது இடத்தில் குப்பை கொட்ட தடைவிதித்து எச்சரிக்கை பேனர் வைக்கப்பட்டுள்ளதை பார்வையிடும் நகர்மன்ற உறுப்பினர் ஜெயந்தி பாபு.
Published on

சீர்காழி:

சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டில் பல்வேறு இடங்களில் நகராட்சி சார்பில் மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம்பிரித்து வைத்து எடுத்து செல்லும் வகையில் குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் நகராட்சி சார்பில் வீடு, வீடாக தூய்மை பணியாளர்கள் குப்பைகளை தரம் பிரித்து வாங்கி நாள்தோறும் வரும் வாங்கி வாகனங்கள் மூலம் நகராட்சி குப்பை கிடங்கில் கொண்டு கொட்டுகின்றர்.

இந்நிலையில் சீர்காழி நகராட்சி 14வது வார்டில் உள்ள கல்யாணி சீனிவாசபுரம் செல்லும் பகுதியில் முகப்பில் குப்பைகள் அதிக அளவு கொட்டப்பட்டு குப்பை மேடாக காட்சி யளிக்கிறது. நாள்தோறும் இந்த குப்பைகளை அகற்றினாலும் குப்பைகள் அகற்றிய உடனே பொதுமக்கள் சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர்.

அதன்படி சீர்காழி நகராட்சி சார்பில் அப்பகுதியில் பொது இடத்தில் குப்பை கொட்ட தடை விதித்து, மீறினால் நடவடிக்கை அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாக

சார்பில் எச்சரிக்கை விடுக்கும் எச்சரிக்கை பலகை தயார் செய்யப்பட்டு அப்பகுதியில் வைக்கப்பட்டது. இந்தப் பணியை நகர மன்ற உறுப்பினர் ஜெயந்தி பாபு மற்றும் நகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com