ஆலங்குளம் அண்ணா நகரில் ரூ.27 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை - பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்

பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பூமிபூஜை விழா நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவர் ஏ.சுதா மோகன்லால் தலைமை தாங்கினார்.
பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பூமிபூஜை நடைபெற்ற காட்சி.
பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பூமிபூஜை நடைபெற்ற காட்சி.
Published on

ஆலங்குளம்:-

ஆலங்குளம் பேரூராட்சி, அண்ணாநகர் பகுதியில், ரூ.27 லட்சம் திட்ட மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பூமிபூஜை விழா நடைபெற்றது.

ஆலங்குளம் பேரூராட்சி, 11-வது வார்டு, அண்ணாநகர் 3-வது தெரு 3-வது சந்து பகுதியில், 15-வது மானியக்குழு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சம் திட்ட மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்காக நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவர் ஏ.சுதா மோகன்லால் தலைமை தாங்கி தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சியில், 11-வது வார்டு உறுப்பினர் வென்சிராணி, 12-வது வார்டு உறுப்பினர் எஸ்.டி.சாலமோன்ராஜா, தொழிலதிபர் ஏ.மோகன்லால், சீதாராமன், பேரூராட்சி அலுவலகப் பணியாளர்கள் அருள்ராஜ், செல்வின், முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com