களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவிலில் பட்டின பிரவேச விழா

சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் கோவிலில் முருகப்பெருமான் பட்டின பிரவேச விழா கோலாகலத்துடன் நடந்தது.முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை அம்மன்களுடன் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.
களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவிலில் பட்டின பிரவேச விழா
Published on

களக்காடு:

களக்காட்டில் பிரசித்திப் பெற்ற சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவின் தொடர் நிகழ்ச்சியான முருகப்பெருமான் பட்டின பிரவேச விழா கோலாகலத்துடன் நடந்தது. இதையொட்டி முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து முருகப்பெரு மான் சிறப்பு அலங்கா ரத்தில் காட்சி அளித்தார்.

அதன்பின் முருகப்பெரு மான், வள்ளி, தெய்வானை அம்மன்களுடன் சப்பரத்தில் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க, வான வேடிக்கையுடன் ரதவீதிகளில் வீதி உலா வந்தார். சப்பரம் பல வண்ண மின் விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ரதவீதிகளில் திரண்ட பக்தர்கள் முருகப்பெருமானுக்கு சுருள் வைத்து வழிபட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com