ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் 85 தீர்மானங்கள் நிறைவேற்றம்

ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய மேம்படுத்தப்பட்ட கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.இதில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் 14 பேர் கலந்து கொண்டனர்.
ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய கூட்ட அரங்கில் சேர்மன் ஜனகர் தலைமையில் நடைபெற்றபோது எடுத்தபடம்.
ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய கூட்ட அரங்கில் சேர்மன் ஜனகர் தலைமையில் நடைபெற்றபோது எடுத்தபடம்.
Published on

தென்திருப்பேரை:

ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய மேம்படுத்தப்பட்ட கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாக்கியம் லீலா, நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் 14 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 85 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் ஒன்றிய குழு துணை தலைவர் ராஜாத்தி, தானி ராஜ்குமார், மல்லிகா, பரமேஸ்வரி, ரகுராமன், மாரிமுத்து, தாமஸ், நசரேத், ஜெயா, பியூலா ரத்தினம், ஜெயகிருபா, காந்திமதி, சஜிதா, ஒன்றிய பொறி யாளர்கள் வெள்ள பாண்டி யன், சிவசங்கரன், சத்துணவு மேலாளர் தனலட்சுமி, அலுவலக பணியாளர்கள் ஆறுமுக நயினார், அருள்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com