சாயர்புரம் பேரூராட்சியில் பயணிகள் நிழற்குடை திறப்பு விழா

நடுவக்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் முன்பு புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது.பேரூராட்சி மன்றத் தலைவி பாக்கியலட்சுமி அறவாழி உள்ளிட்ட பலர் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
நடுவக்குறிச்சியில் புதிதாக அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்ற போது எடுத்தபடம்.
நடுவக்குறிச்சியில் புதிதாக அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்ற போது எடுத்தபடம்.
Published on

சாயர்புரம்:

சாயர்புரம் பேரூராட்சியில் உள்ள நடுவக்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் முன்பு செபத்தையாபுரம் லயன்ஸ் சங்கம் சார்பில் புதிய பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநர் விஸ்வநாதன் தலைமை தாங்கி திறந்து வைத்தார். லயன்ஸ் சங்க வட்டாரத் தலைவர் ஆலயமணி, சங்கத் தலைவர் ஜெயராஜ் சாயர்புரம் பேரூராட்சி மன்றத் தலைவி பாக்கியலட்சுமி அறவாழி, சாயர்புரம் பேரூராட்சி செயல் அலுவலர் பிரபா, கூட்டுறவு பண்டக சாலை தலைவர் எஸ்.வி.பி.எஸ். பண்டாரம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் த.அறவாழி, நகர தி.மு.க. செயலாளர் நா.கண்ணன், பேரூராட்சி துணை தலைவர் பிரியா மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சாயர்புரம் பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜெப தங்கம் பிரேமா ஜெயக்குமார், எஸ்.வி.பி.எஸ். ஜெயக்குமார், முத்துராஜ்,இந்திரா, சுமதி, அமுதா, ப்ளாட்டினா மேரி, மற்றும் சாயர்புரம் வியாபாரிகள் சங்கத் தலைவர் நாகராஜன், பேரூராட்சி மேற்பார்வையாளர் நித்திய கல்யாண் பேரூராட்சி ஊழியர்கள், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை லயன்ஸ் சங்க செயலர் சாலொமோன் பொன்ராஜ், செபத்தையாபுரம் ஊர் நலக் கமிட்டி தலைவர் அமிர்தராஜ் மற்றும் எஸ்.வி.பி.எஸ். ஜெயக்குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com