பெற்றோர் திருமண ஏற்பாடு: 17 வயது சிறுமி வீட்டை விட்டு ஓட்டம்

உறவினரான தாய் மாமாவை திருமணம் செய்து வைப்பதாக சிறுமியின் வீட்டில் ஏற்பாடுகள் செய்து வந்தனர்.சிறுமியை பல்வேறு இடங்களில் தேடியும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
பெற்றோர் திருமண ஏற்பாடு: 17 வயது சிறுமி வீட்டை விட்டு ஓட்டம்
Published on

விழுப்புரம்:

திருவெண்ணைநல்லூர் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அரசூரில் உள்ள தனியார் கல்லூரியில் இ.சி.இ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு இவரது உறவினரான தாய் மாமாவை திருமணம் செய்து வைப்பதாக சிறுமியின் வீட்டில் ஏற்பாடுகள் செய்து வந்தனர். இதை அறிந்த சிறுமி எனக்கு இப்போது திருமணம் வேண்டாம் நான் படித்து முடித்த பின்னர் பார்க்கலாம் என்று மறுத்துவிட்டார். ஆனால் சிறுமியின் பெற்றோர் இதைக் கேட்காமல் மீண்டும் திருமண ஏற்பாடுகளை செய்தனர். திருமணம் செய்ய விருப்பம் இல்லாத சிறுமி நேற்று இரவு 11 மணி அளவில் நான் எங்கேயாவது ஆசிரமத்திற்கு செல்கிறேன் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு சென்றார்.

இன்று காலை பெற்றோர் எழுந்து பார்த்தவுடன் சிறுமி மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடியும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் சிறுமியின் பெற்றோர் திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து வீட்டை விட்டு சென்ற சிறுமி எங்கு சென்றார் என்பது குறித்து கடிதம் மூலம் விசாரணை நடத்தி வருகிறார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com