பரமத்திவேலூர் பகுதி முருகன் கோவில்களில் சிறப்பு ஆராதனை

பாலமுருகனுக்கும் மார்கழி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்க ளால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பருவத்தூர்பேட்டை முருகப்பெருமான், கோப்பணம்பாளையம் பாலமுருகன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி. 
பருவத்தூர்பேட்டை முருகப்பெருமான், கோப்பணம்பாளையம் பாலமுருகன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி. 
Published on

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்குக்கும், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கும் மார்கழி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி உள்ளிட்ட 18 வகை

யான வாசனைத் திரவியங்க ளால் அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மலர்க ளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அதேபோல் கபிலர்மலையில் உள்ள ‌பிரசித்தி பெற்ற பால

சுப்பிரமணியசாமி கோயில், பரமத்தியை அடுத்த பிராந்த கத்தில் உள்ள ஆறுமுகக்கடவுள் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில்‌ உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை‌ முருகன் கோவில், அனிச்சம்பாளையத்தில் உள்ள

வேல் வடிவம் கொண்ட

சுப்ரமணியர், பிலிக்கல்பா ளையம் ‌விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவில், நன்செய்இடையார் திருவே லீஸ்வரர் கோவிலில் உள்ள

‌சுப்ரமணியர், ராஜா சுவாமி

திருக்கோவில், அய்யம்பாளை யத்தில் உள்ள முருகப்பெருமாள் கோவில் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com