கோவில்பட்டி புற்றுக்கோவிலில் பங்குனி உத்திர சிறப்பு பூஜை

கல்யாண முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.பூஜையில் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
புற்றுக்கோவிலில் பங்குனி உத்திர சிறப்பு பூஜை நடைபெற்ற போது எடுத்த படம்.
புற்றுக்கோவிலில் பங்குனி உத்திர சிறப்பு பூஜை நடைபெற்ற போது எடுத்த படம்.
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக்கோவிலில் பங்குனி உத்திர சிறப்புப் பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலை 6 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி, ஸ்தபன கும்பகலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூல மந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. பின்னர் வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகனுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார்.

விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்த னர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com