தோரணமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு

கடையத்தில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோவில்.பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கோவிலில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேர தொடர் சிறப்பு வழிபாடு பூஜை நடைபெற்றது.
தோரணமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு நடைபெற்ற காட்சி.
தோரணமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு நடைபெற்ற காட்சி.
Published on

கடையம்:

கடையத்தில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோவில்.

நேற்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கோவிலில், பெண்கள் முன்னேற்றம் காணவும், மாணவர்கள் கல்வியில் செழிக்கவும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேர தொடர் சிறப்பு வழிபாடு பூஜை நடைபெற்றது.

அன்னதானம்

தொடர்ந்து சாமிக்கு அபிஷேகம், ஆராதனை, தீபாராதனை நடைபெற்றது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் இந்த கோவில் பரம்பரை அறங்காவலர் ஆதிநாராயணன் முன்னோர்களுக்கு, 1930-ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் வழங்கப்பட்ட மணி மூலம் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மணி அடிக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதில் கடையம், பாவூர்சத்திரம், ஆலங்குளம், தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com