பங்குனி மாத கிருத்திகை வழிபாடு

செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் சுவாமி அருள்புரிகின்றனர்.பங்குனி மாத கிருத்திகையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
கிருத்திகை வழிப்பாட்டில் தருமபுரம் ஆதீனம் சாமி தரிசனம் செய்தனர்.
கிருத்திகை வழிப்பாட்டில் தருமபுரம் ஆதீனம் சாமி தரிசனம் செய்தனர்.
Published on

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகிஅம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது.

இக்கோயிலில் செல்வமுத்துக்குமாரசுவாமி, செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் சுவாமி அருள்புரிகின்றனர்.

இங்கு பங்குனி மாத கிருத்திகையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வமுத்துக்குமாரசுவாமிக்கு 21வகையான நறுமன திரவியபொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டு மலர்கள்,ஆபரணங்கள் கொண்டு அலங்காரம் நடைபெற்றது.

தொடர்ந்து சண்முகார்ச்சனை செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இந்நிகழ்வில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வருகை புரிந்து, கிருத்திகை வழிப்பாட்டில் பங்கேற்று தரிசனம் செய்தார்.

இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com