குருங்காவனத்தில் வீட்டின் முன்பு போடப்பட்ட பந்தல் தீ விபத்தில் எரிந்து நாசம்

பூப்புனித நீராட்டு விழாவிற்காக குருங்காவனத்தில் வீட்டின் முன்பு பந்தல் போட்டுள்ளனர். தீ விபத்து தொடர்பாக சுரண்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீ விபத்தால்  நாசமான பந்தல்.
தீ விபத்தால் நாசமான பந்தல்.
Published on

சுரண்டை:

சுரண்டை அருகே உள்ள குருங்காவனம் கீழத்தெருவை சேர்ந்தவர் மாட சாமி ( வயது 36). இவரது மகளின் பூப்புனித நீராட்டு விழா நிகழ்ச்சி நாளை மறுநாள் ( 10-ந்தேதி) நடைபெற இருந்தது. இதற்காக அவரது வீட்டின் முன்பு ஓலை பந்தல் போட்டுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை 1 மணி அளவில் வீட்டின் முன்பு இருந்த பந்தல் திடீரென தீப்பிடித்தது.இதில் பந்தல் முழுவதும் தீயில் எரிந்தது. அருகில் இருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். சம்பவம் குறித்து சுரண்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com