கடையம் பெரும்பத்து ஊராட்சியில் பனை விதை நடும் விழா

கடையம் பெரும்பத்து ஊராட்சியில் பனை விதை நடும் விழா நடைபெற்றது. பனைவிதைகளை ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன் நட்டு தொடங்கி வைத்தார்.
கடையம் பெரும்பத்து ஊராட்சியில் பனை விதைகளை ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன் நட்டு தொடங்கி வைத்த காட்சி.
கடையம் பெரும்பத்து ஊராட்சியில் பனை விதைகளை ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன் நட்டு தொடங்கி வைத்த காட்சி.
Published on

கடையம்:

கடையம் யூனிய னுக்குட்பட்ட கடையம் பெரும்பத்து ஊராட்சியில் பனை விதை நடும் விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன் தலைமை தாங்கி பனைவிதைகளை நட்டு தொடங்கி வைத்தார்.

மேட்டூர் - தோரணமலை செல்லும் சாலையில் சுமார் 800 பனைவிதைகள் நடப்பட்டது.இதில் வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன் ராணி, வேளாண்மை அதிகாரி அபிராமி, இணை வேளாண்மை அலுவலர் சுப்புராம், உதவி வேளாண்மை அலுவலர் கிருஷ்ண மூர்த்தி, தொழில் நுட்ப அதிகாரி கிருஷ்ணமூர்த்தி , கடையம் பெரும்பத்து தொழிலதிபர் பரமசிவன் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com