விழுப்புரம் மாவட்ட புதிய கலெக்டராக பழனி பொறுப்பேற்பு

மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்துவதற்கான அனைத்து பணிகளையும் சிறப்பான முறையில் மேற்கொள்வேன்விழுப்புரம் மாவட்ட கலெக்டராக பழனி பொறுப் பேற்றுக் கொண்டார். விழுப்புரம் மாவட்டவிழுப்புரம் மாவட்ட கலெக்டராக பழனி பொறுப் பேற்றுக் கொண்டார்.
புதிய  கலெக்டர்  பழனி,
புதிய  கலெக்டர்  பழனி,
Published on

விழுப்புரம்,:

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், விழுப்புரம் மாவட்ட கலெக்டராக பழனி பொறுப் பேற்றுக் கொண்டார்.

விழுப்புரம் மாவட்டத்தின் புதிய கலெக்டர் பழனி நிருபர் களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:  புதியதாக பொறுப்பேற்க உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களும் அந்தந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், பொது மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அதனடிப்படையில், தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை சரியான முறையில் பயன்படுத்தி மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், விளிம்பு நிலை மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்துவதற்கான அனைத்து பணிகளையும் சிறப்பான முறையில் மேற்கொள்வேன். இவ்வாறு அவர் பேட்டியளித்தார்அ ப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, திண்டிவளம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஸ்வநாதன், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் சிவா மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com