சென்னை விமான நிலையத்தில் பாகிஸ்தான் அமைப்பு தீவிரவாதி கைது: என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடவடிக்கை

என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணை நடத்துவதற்காக தெலுங்கானாவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் பாகிஸ்தான் அமைப்பு தீவிரவாதி கைது: என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடவடிக்கை
Published on

ஆலந்தூர்:

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் ஜக்ரியா. பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்பில் இணைந்து செயல்பட்டு வரும் இவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

தெலுங்கானா போலீசாரும், அம்மாநிலத்தில் இயங்கி வரும் என்.ஐ.ஏ. அதிகாரிகளும் ஜக்ரியாவை கண்காணிப்பு வளையத்துக்குள் வைத்திருந்தனர்.

இந்த நிலையில் ஜக்ரியா வெளிமாநிலத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வருவதாக என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து விமான நிலையத்தில் அவர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது ஜக்ரியா அதிகாரிகள் பிடியில் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்துவதற்காக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெலுங்கானாவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இவரது பின்னணி தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜக்ரியாவின் பாகிஸ்தான் பின்னணி தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com