15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலி

2 மாதங்களாக வேலை செய்து வந்தார். சிமிண்ட் சீட் உடைந்து கீழே விழுந்தார்.
15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலி
Published on

கோவை

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் புஸ்பராஜ் (வயது 45). பெயிண்டர். இவர் வேலைக்காக கோவை மாவட்டம் பொள்ளாச்சி வந்தார்.

பின்னர் அம்பராம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மில்லுக்கு பெயிண்டிங் வேலைக்கு சென்றார். அங்கு கடந்த 2 மாதங்களாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று வழக்கம் போல மில்லுக்கு வேலைக்கு சென்றார்.

அங்கு 15 அடி உயரத்தில் சிமிண்ட் சீட் மீது நின்று பெயிண்ட் அடித்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக சிமிண்ட் சீட் உடைந்து புஸ்பராஜ் கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து புஸ்பராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com